ப்ரஸ்னஜோதிஷ பலன்கள் .

.

Website

https://www.keraliyaprashnajyothisham.com/

எந்த காரியத்தை தொடங்கினாலும் முதலில் காரியதடைகள் உண்டாக்கும்.

உன்னதமான வித்யாப்யாஸம், தனம் போன்றவைகளும் தடைகளை உண்டாக்கும். விதேஸயோகங்கள் உண்டு. அதேபோல் ஸ்த்ரீயின் ஜாதகத்தில் இருந்தால் கெட்டுதாலி கெட்டும் புருஷனுக்கு விதேஸயோகங்கள் உண்டாக்கும்.

சகோதர சகோதரிமார்களாள் தொல்லைகள் உண்டாக்கும். அதேபோல் இவராலும் அவர்களுக்கு நன்மைகள் உண்டாகாது.
ஆனாலும் மூன்றாம் பாவகவன் ஒன்பதாம்க்ஷேத்ரத்திலோ. சுயக்ஷேத்ரத்திலோ. பதினொன்றிலோ இருந்தால் சகோதரர்கள் குணங்கள் உண்டாக்கும்.

நெடுநாளாக வாடகை வீட்டில்தான் ஜீவிப்பார்கள். மாதாவிற்கு தேகஆரோக்கியம் குறையும். அடிக்கடிஅடிக்கடி வாகன விபத்துகள் உண்டாக்கும். தங்களுடைய தாயாரை விட்டு விலகிருப்பார்கள்.
அதேபோல் பிற்காலத்தில் விதேஸ யாத்ரா உண்டு.

புத்திரபாக்கியங்கள் உண்டு. ஆனாலும் புத்ர துக்கங்கள் அனுபவிப்பார்கள்.
பூர்வபுண்ய தோஷங்களும் உண்டு. ஆனாலும் ஐந்தாம்பாவகத்தோனோடு கூடினால் புத்ரபாக்யம் சீக்கிரமா கிட்டாதுபோகும்.

இப்படியுள்ள ஜாதகருக்கு சத்ருக்கள் தானாகவே அழிந்துபோவார்கள்.

மாங்கல்யகர்ம்மங்கள் நீண்டுகொண்டே போகும். இவர்கள் ஜாதக பொருத்தம் பார்க்காமல் விவாஹம் செய்தால் விவாஹிதர்கள் தம்மில் பரஸ்பரம் சண்டைகள் உண்டாகும். சிலவேளைகளில் விவாஹரத்துகளும் நடக்கும், குரு பார்த்தால் முறிவு நடக்காது.

துஷ்டசீலங்கள் வந்துகூடும் ஆயூளுக்கு பங்கம் வரலாம்.

புத்திரபாக்கியங்கள் உண்டு. ஆனாலும் புத்ர துக்கங்கள் அனுபவிப்பார்கள்.
பூர்வபுண்ய தோஷங்களும் உண்டு. ஆனாலும் ஐந்தாம்பாவகத்தோனோடு கூடினால் புத்ரபாக்யம் சீக்கிரமா கிட்டாதுபோகும்.

பதினொன்றில் குளிகன் நல்லது, ஆனாலும் பதினொன்றவரோடுகூடியும்போது இலாங்களை குறிக்கும். மூத்தசகோதரர்களோடு அபிப்ராயபேதங்களை உண்டாக்கும். அதேநேரம் பதினொன்று அதிபதி ஒன்பதிலும் இலக்னத்திலும் இருந்தால் நல்ல லாபம் உண்டாகும்.

பன்னிரண்டாம் அதிபதியோடுகூடினால் உறக்கம் நஷ்டப்படும். புருஷ/புருஷத்தி பிரிவினை உண்டாக்கும். அல்லது ஒருவருக்கு விதேஸ ஜீவிதம் உண்டாக்கும்.

மேடம், விருச்சி, துலா நின்றாலோ, ஐந்து. ஒன்பது வீடுகளில் நின்றிருந்தால் விவாஹம் நீண்டுபோகும்.
அதேபோல் கற்கிடதத்தில் நிற்குகியோ, அதற்கு ஐந்தாம்பாவகஸேனாகவோ, அல்லது ஒன்பதாம்பாவகாதிபதியாகவோ சந்திரன் வந்தால் அந்த சந்திரனோடுகூடி குளிகன் சேர்ந்தாலோ புத்திரபாக்கியம் நீண்டுபோகும்.

மாங்கல்யகர்ம்மங்கள் நீண்டுகொண்டே போகும். இவர்கள் ஜாதக பொருத்தம் பார்க்காமல் விவாஹம் செய்தால் விவாஹிதர்கள் தம்மில் பரஸ்பரம் சண்டைகள் உண்டாகும். சிலவேளைகளில் விவாஹரத்துகளும் நடக்கும், குரு பார்த்தால் முறிவு நடக்காது.

துஷ்டசீலங்கள் வந்துகூடும் ஆயூளுக்கு பங்கம் வரலாம்.

பதினொன்றில் குளிகன் நல்லது, ஆனாலும் பதினொன்றவரோடுகூடியும்போது இலாங்களை குறிக்கும். மூத்தசகோதரர்களோடு அபிப்ராயபேதங்களை உண்டாக்கும். அதேநேரம் பதினொன்று அதிபதி ஒன்பதிலும் இலக்னத்திலும் இருந்தால் நல்ல லாபம் உண்டாகும்.

பன்னிரண்டாம் அதிபதியோடுகூடினால் உறக்கம் நஷ்டப்படும். புருஷ/புருஷத்தி பிரிவினை உண்டாக்கும். அல்லது ஒருவருக்கு விதேஸ ஜீவிதம் உண்டாக்கும்.

மேடம், விருச்சி, துலா நின்றாலோ, ஐந்து. ஒன்பது வீடுகளில் நின்றிருந்தால் விவாஹம் நீண்டுபோகும்.
அதேபோல் கற்கிடதத்தில் நிற்குகியோ, அதற்கு ஐந்தாம்பாவகஸேனாகவோ, அல்லது ஒன்பதாம்பாவகாதிபதியாகவோ சந்திரன் வந்தால் அந்த சந்திரனோடுகூடி குளிகன் சேர்ந்தாலோ புத்திரபாக்கியம் நீண்டுபோகும்.

இவன்
அவிட்டத்தோன்

.

1 ஒரு ஜாதகத்தில் இலக்னக்ஷேத்ரஸேகன் எந்த பாவகத்தில் ஸ்திதி கொண்டுள்ளாரோ? அந்த பாவகவத்தின் காரகத்துங்கள் மூலம்தான் ஜாதகருக்கு விஜயங்கள் கிட்டும், ஒருவேளை ஜாதகரின் இலக்னஸேனன் ஆறாம்பாவகத்தில் இருந்தால் ஜாதகருக்கு, கடன்களோ, ரோகங்களோ கூடியிருக்கும். அதேபோல்தான் ஒருவேளை ஜாதகருடைய இலக்னக்ஷேத்ரஸேனகன் பூர்வபுண்ய பாவகமான ஐந்தாபாவகத்தில் இருந்தால் ஜாதகருக்கு அவருடைய சஞ்சிதகர்மா என்கிற பூர்வபுண்ய அடிஸ்தானத்தில்தான் ஜீவிதம்காலம் அமையும். ஒருவேளை அந்த பூர்வபுண்யபாவகம் இலக்னஸேனனுக்க்கு சத்ரு பாவகம் ஆயிருந்தால் ஜாதகரின் பூர்வபுண்ய கர்ம்மங்கள் குறைவாக இருக்கும், அதற்கேற்றாற்போல் தற்போதைய ஜீவிதம் அமையும். சில ஜாதகருக்கு இலக்னக்ஷேத்ரத்திற்கும் மற்றும் இலக்னஸேனனுக்கும் ஐந்தாம்பாவகம் மித்ரக்ஷேத்ரம் ஆகி அந்த பாவகத்தின் அதிபதி உச்சக்ஷேத்திரம், மித்ரக்ஷேத்ரம், நவாம்ஸகக்ஷேத்ரத்தில் வர்க்கோத்தமம் போன்ற ஸ்திதி அமைந்திருந்தால், ஐந்தாம்பாவகம் புத்திரபாக்கிய பாவகம் அல்லவோ! ஆதனால் அந்த பாவகஸேனன் நல்ல ஸ்திதியில் இருந்தால் ஜாதகருக்கு பிள்ளைகள் பிறந்து வளரும்போது தான் ஜீவிதத்தில் விஜயங்கள் ஜாதகர் பெறமுடியும்.

5 இலக்னக்ஷேத்ரம், இலக்னஸேனன், ஐந்தாம்பாவகஸேனன், போன்றவர்கள் நீச்சக்ஷேத்ரம், சத்ருக்ஷேத்ரம், சூரியனோடுகூடி மௌடில்யகதோஷம் போன்ற தொடர்புகள் உண்டாயிருந்தால் ஜாதகர்கள் தெரிந்துகொள்ளலாம் தங்களுடைய கழிந்த சஞ்சிதகர்மாவில் தங்களுக்கு பூர்வபுண்ய பலம் குறைவு, தாங்கள் இந்த ஜென்மத்தில் ஜீவிதகாலம் முழுவதும் துரிதங்கள் அனுபவிக்க பிறந்தவர்கள் என்று. அறிந்துகொள்ளலாம்.

2 இலக்னக்ஷேத்ரத்தின் யோகாதிபதிகள் ஏது பாவகக்ஷேத்ரங்களில் அதற்கேற்றாற்போல் தான் யோகங்கள் கூடும், குறையும். ஒருவேளை யோகாதிபதிகள் 6, 8 12 போன்ற அனிஷ்டகக்ஷேத்ரங்களில் ஸ்திதி கொண்டிருந்தால் ஜாதகர் யோகத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம்.
உதாகரணத்திற்கு கன்னிலக்னக்ஷேத்ரம், அது உபயராசி அல்லவோ! அப்போது அதற்கு ஒன்பதுக்குடையவர் யோகாவான், சுக்கிரன் யோகவான் ஆகின்றார். அவர் இரண்டாம்பாவகத்தில் இருந்தால், ஒன்பதாம்பாவகஸேனன் இரண்டில், ஒன்பாதாம்வகம் தந்தை ஸ்தானம் அல்லவோ! அப்போது சுக்கிர தெஸாகாலங்களில் தந்தையுடைய ஆஸ்திகள் ஜாதகருக்கு அனுபவிக்க வேண்டிவரும்.

3 இலக்னஸேனன், மற்றும் மற்றும் இராசிஸேனன் இவர்கள் கேந்திரக்ஷேத்ரங்களில் நின்றிருந்தாலும், யோகாதிபதிகள் கேந்திரக்ஷேத்ரங்களில் நின்றிருந்தாலும் ஜாதகருக்கு கிடைக்ககூடிய யோகபலன்கள் கூடிகூடி வரும்.

4 6.8.12 ஆகிய அனிஷ்டகக்ஷேத்ரங்கன்மார்கள் என்கிற மறைவுக்ஷேத்ர அதிபன்மார்கள் எந்த பாவகத்தில் ஸ்திதி கொண்டிருந்தாலும் தோஷங்கள் மட்டுமே கொடுக்கும்.
அதேபோல் தான் யோகவான்மார்கள் மறைவுக்ஷேத்ரங்களில் ஸ்திதி கொண்டிருந்தாலும் யோகபலன்கள் ஜாதகருக்கு கிட்டாதுபோகும்.

இவன்
அவிட்டத்தோன்

1. ஈசான மூலை

ஈசான மூலை (வடகிழக்கு) வழியேயே சகலசௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும். ஈசான மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயதுமுதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம். ஈசான மூலையை அடைப்பதுபோல் நிலைப்பேழை வைக்கக்கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு சுமை, தேவையற்ற பழைய பொருட்களையும் அடைத்து வைக்கலாகாது. வீட்டின் பிரதான ஈசான மூலையில் கழிப்பறை, குளியலறை, செப்டிக்டேங்க், துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. பரணில் ஈசான மூலையில் பொருட்களை வைக்கக்கூடாது. வீட்டின் ஈசான மூலை கீழ்நிலைத் தொட்டி, கிணறு போன்றவை அமைக்க வேண்டிய இடம், ஈசான மூலையில் நீரோட்டம் இல்லாத போது, தென்மேற்கு, தென்கிழக்கு தவிர்த்து கிணறு தோண்டவும், பிறகு ஈசான மூலையில் கீழ்நிலைத் தொட்டி அமைக்கவும். வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களான பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போதும்.
பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது மன அழுத்தத்தை தரும்.

2. அக்னி மூலை

அக்னி மூலை- தென்கிழக்கு மூலை. இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும். பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும். வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க இயலா விடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு (மண்ணெண்ணை,எரிவாயு,போன்றவை) இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். விதிவிலக்காக வாயு (வடமேற்கு) மூலையில் சமையற்கூடமும், அடுப்பும் அமைக்கலாம். அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிப்பறை, குளியலறை, இருக்கக்கூடாது. வீட்டின் பிரதான அக்னி மூலையில் கிணறு,கழிப்பறை, குளியலறை, கழிவுத் தொட்டி,(செப்டிக்டேங்க்) துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. வீட்டின் அக்னி மூலையில் மின்சாதனங்களை வைக்கலாம். சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசையில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.

குபேர (வடக்கு)மூலை

செல்வம் தங்கவும், பணவிருத்திக்கும் குபேர (வடக்கு)மூலை,

நிருதி (தென்மேற்கு) மூலை

நிருதி (தென்மேற்கு) மூலையில் பணப்பெட்டி, நிலைப்பேழை வைக்கவும், சுவற்றில் பணப்பெட்டியை பதிப்பதாயின் நிருதியில் பதிக்கவும்.வீதியைப்பார்த்துத் தான் வாயிற்படியை அமைக்க முடியும், எனவே, தெற்கு, மேற்கு வாயிற்படிகள் தவிர்க்க முடியாதவைகளே, தெற்கு, மேற்கு திசையில் தலைவாயில் அமைக்கும்படி நேரினும், ஈசானமூலை, அக்னிமூலையை சரியாக அமைத்துக் கொண்டால் போதும். தெற்கு, மேற்கு தலைவாயில் அமைந்த வீட்டின் கொல்லைப்புறமாக ஈசான, அக்னி மூலைகள் அமைவதை கவனிக்கவும்.

மையப் பகுதி

வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாக வும் இருக்கக் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந் தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்சனைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது.மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடாது. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும். போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க்காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடியே போகும். வாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா? அப்படியானால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.

வாயு மூலை

கழிப்பறை,குளியல் அறைகளை வடமேற்கு (வாயு) மூலையில் அமைக்கவும். சில இடங்களில் விதிவிலக்காக இந்திரன் (கிழக்கில்) மூலையில் கழிப்பறை அமைக்கலாம்.
குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதால், இந்த அறை வடமேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும். நிருதியில் (தென்மேற்கில்) படுக்கையறையைில் அட்டாச்டு பாத்ரூம் வேண்டின் அந்த அறையின் தென்மேற்கு மூலையில் அமைக்கவும், முதன்மை படுக்கை அறை தான் உறுதிப்பாடு என்ற கதவுக்கு சாவி. அது தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். மேலும் தூங்கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப் பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது. படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும் .தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட்டக்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.

வாயிற்படி, அறைகளின் அளவு

வாயிற்படி. வீட்டின் தலைவாயிற்படி முக்கியமாக கவனிக்கத்தக்க அம்சமாகும், பொதுவாக கிழக்கு,வடக்கு திசைகளில் தலைவாசல் இருப்பின் நலம், தெற்கு, மேற்குவாசல் படி இருப்பின். கொல்லைப்புறம் வடகிழக்கு, தென்கிழக்காக அமைந்து ஈசாநமூலையும், அக்னி மூலையும் பலம் இழக்க பழுதுபட நேரிடும், மனையடிப்படி, அறைகளின் அறைகளின் உட்கூடுஅளவுகளில் 7,9,12,13,14,15, கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும். முழுமையான அளவுகளில் உட்கூடு அமைவுது அவசியம், இடம் வீணாகக்கூடது என 8.5,7.5,10.5 போன்ற அளவுகளைத்தவிரக்கவும். மாடிப்படிகளுக்கு அடியில் இடத்தைப்பொருத்து சாமான் வைப்பறை வைக்கலாம். மாடிப்படிக்கட்டுக்கள் வடக்கு, வடகிழக்கு,தென்கிழக்கு, கிழக்கு பக்கங்களை அடைக்கும் படிக்கட்டக்கூடாது. தெர்கிலிருந்து வடக்காகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் செல்லும்படி மாடிப்படிக்கட்டுக்களை அமைத்தல் நலம்.

தொழில் வாஸ்து

 தொழில் நிறுவனங்கள், கடைக்களுக்கும் வாஸ்து பார்க்க வேண்டுமா என்ற கேள்வி இயல்பானது,தொழிற்சாலைகள் முதல் ஒரு சிறிய கடை வரை வாஸ்துபடி அமையின் அதன் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதை அனுபவப்பூர்வமாக கண்டுஉள்ளோம், அலுவலகத்தில் எந்த தைசையில் இருந்து வரும் வாடிக்கையாளர்களை எதிர் நோக்க வேண்டும், நாம் எந்த திசையில் அமர வேண்டும் என்று பார்ப்போம். வாடிக்கையாளர்கள் உள்நூழையும் போது அவர்களுக்கு முதுகைக்காட்டியபடி அமரக்கூடாது, அடுத்து அவர்கள் வடக்கில் அமர்ந்து நாம் தெற்கே அமரக்கூடாது, தென்மேற்கில் அமர்ந்து கிழக்கு நோக்கி இருக்கலாம், வடக்கில் இருந்து கிழக்கிலிருந்து வரும் வாடிக்கையாளர்களை, தெற்கிலிருந்து வரும் வாடிக்கையாளர்களை வரவேற்கலாம். நமக்குப்பின் நம் முன்னோர்களின் படங்களை வைக்கலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு தாராளமாக வைக்கலாம். நமக்குப்பின்னே அழகிய இயற்கைக்காட்சிகள், மலைகள், ஓடும் குதிரை படங்களை வைக்கலாம், நம் அலவலகத்தின் வடகிழக்கு முலையில் தண்ணீர்விட்டு அதில் மலர்களைப்போட்டு வைக்கலாம், மணிக்கொடி போன்ற நிழலில் வளரும் செடிகளை வைக்கலாம். பணப்பெட்டி அல்லது பீரோ தென்மேற்கில் இருப்பது மிக நல்லது. கல்லாப்பெட்டியை கைக்குலாவகமாக வைத்துக்கொண்டு தென்மேற்கில் பீரோவைத்து பயன் படுத்தலாம், தெந்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கில் பீரோ வைப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும்.

 

வாஸ்து குறைகளைப்போக்கும் சிறுபரிகாரங்கள்

ஈசான மூலையில் ( வடகிழக்கு) சிறிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டு வைத்தல்.
வண்ண மீன்தொட்டி வைத்தல். பசுமையான செடிகளை வளர்த்தல் (மணிக்கொடி போன்றவை)
மஞ்சள் குழைத்து வீட்டுக்கதவு சன்னலில் சுவஸ்திக், ஓம், சூலம் போன்ற குறிகளை இடல்,
மாவிலைத்தோரணம் கட்டல். அவ்வப்போது பஞ்சகவ்யத்தை (பசுவின்பால், தயிர், நெய், சாணம் ,கோமயம் ஆகியவற்றின் கலவை) வீட்டைச்சுற்றியும், உள்ளேயும் தெளித்து விடல்.
இனிமையாக ஒலிக்கும் “வின்ட்செம்”களை வீட்டினுள் கட்டிவிடுதல். பிரமிடுகளை வைத்தல். பகுவாகண்ணாடியை வீட்டின் தலைவாயிற்படியின் மேல் மாட்டிவிடல். தகுந்த மூலைகளில் தக்க பொருட்களை மட்டும் வைத்தல்

நவக்கிரகங்களும் திசைகளும்

சுக்கிரனின் ஒளியானது கிழக்கே இந்திர மூலையிலும்,
செவ்வாயின் ஒளியானது தென் கிழக்கே அக்னி மூலையிலும்,
கேதுவின் ஒளியானது தெற்கே ஏமன் மூலையிலும்,
புதனின் ஒளியானது தென் மேற்கே நிருதி மூலையிலும்,
சந்திரனின் ஒளியினாது மேற்கே வருண மூலையிலும்,
ராகுவின் ஒளியானது வடமேற்கே வாயு மூலையிலும்,
குருவின் ஒளியானது வடக்கே குபேர மூலையிலும்,
சனியின் ஒளியானது வடகிழக்கே ஈசான்ய மூலையிலும் பதிகின்றன.
சூரியனின் ஒளியாகப்பட்டது, அண்டம் முழுவதும் பரவியிருக்கககூடியது. இந்த கிரகங்களின் ஒளியை தான் நாம் கிரக பார்வை ஏன கூறுகின்றோம்.

இவன்
அவிட்டத்தோன்

.

1 பாரதீய சனாதனதர்ம்ம ஐந்தவ விஸ்வாஸங்களின் படி! தேவாலயக்ஷேத்ரங்கள் நிர்மாணிக்கும்போது தாந்தீரி ஸாஸ்த்ரபடி உலோகங்கள் கொண்டு தேவதேவிமார்கள் விக்ரகங்கள் பிரதிஷ்டிக்கும்போது, அந்த விக்ரகங்கள் அடியில் ஸ்ரீசக்ரம் ஸ்திதி செய்வார்கள். ஒரு துள்ளி அளவு மனுஷ்ய புருஷனின் ஸரீரத்திலிருந்து வெளியே வருகின்ற பீஜசுக்லத்திலிருந்து ஓராயிரம் நரம்புகள் கொண்ட மனுஷ்யஜீவிகள் வருகிதென்றால்? தேவனின் சிருஷ்டி கர்ம்மத்தின் மற்றொன்று சம்பவத்தை உதாகரணமாக காட்டமுடியுமோ? பாரதீய சனாதனதர்ம்ம ஆச்சார்யன்மார்கள் கணித்தன்படி மனுஷ்ய ஸரீரம் என்பது மிகப்பெரிய அதிசயம்தானே?

யதே ப்ரமாண்டா!
ததே பிண்டாண்டா!

ஸ்தூலத்தில் ஸ்ரீசக்ரமும் பிரமாண்டத்தையும்,
சூஷ்மத்தில் மனுஷ்ய ஸரீரமும் பிரமாண்டமும் வெளிபடுகின்றது!

ஸ்ரீ சக்ரம் ரகஸ்யம் என்னதான்?

பாரதீய ஹிந்துவ ஸாஸ்த்ரங்களில்,
ருக், யஜுர். ஸாம, அதர்வ போன்ற நான்குவிதமான சதுர்வேதங்கள் உண்டல்லவோ! இந்த நான்குவிதமான சதுர்வேதங்களையும் கற்றுணர்ந்தவரை சதுர்வேதி என்றெழைக்கப்படுகின்றார்,
அவ்வாறு எத்தனை சதுர்வேதங்கள் கற்றுணர்ந்த சதுர்வேதிகள் உள்ளார்கள்?
ஒருவேளை அந்த சதுர்வேதிகள் கற்றுணர்ந்த சதுர்வேதிகள் அந்த வேதங்களின் அர்த்ததை தெரிந்து கொண்டவர்கள் எத்தனை பேர்கள் உள்ளார்கள்?

ஸ்ரீசக்ரத்தை குறித்து வேதங்கள் என்ன சொல்கின்றது?
லோகமாதாவிகிய தேவமாதா ஆதிபராசக்தி விஸ்வாமித்ரக்கு சொல்லி கொடுத்ததுதான்,
ஸ்ரீ காயத்ரி மந்திரம் ஆகும்.
ஸ்ரீசக்ரத்தில் மந்திர உபாஸனா விற்பன்னர்கள் ஸ்ரீசக்கரத்தில் நித்யமும், நித்யமும் ஓதிஓதி அந்த ஸ்ரீசக்கரத்திற்கு ஒரு ஆகர்ஷணகா சக்தியை உருவாக்கிறது.
இந்த. ஸ்ரீசக்ரம் என்பது முப்பத்திமூன்றுகோடி தேவதேவன்மார்களின் ஆராதானா கர்ம்மங்கள் ஆகும் அவைகளின் உபாஸனா மார்க்கங்கள் ஆகும்.
அதாவது பூதகணங்கள், யக்ஷகன்மார்கள், யக்ஷிகன்யமார்கள், இராக்ஷகன்மார்கள், நாகதேவதைகள், தைத்ய தேவன்மார்கள், கிண்ணரன்மார்கள், பேரதங்கள், காந்தர்வன்மார்கள், அப்ஸரஸ் கன்யைகைமார்கள் சைவதேவன்மார்கள், வைஷ்ணதேவன்மார்கள், சௌர தேவன்மார்கள், சாக்த தேவன்மார்கள், காணபத்ய தேவன்மார்கள்.
திருமூர்த்திகள்
எல்லாவரும்கூடி ஒரே இடத்தில் ஸ்திதி கொள்கின்ற கேந்த்ரஸ்தானம் தான்
.,. ஸ்ரீ சக்கரம்,.
ஆகும்.

அந்த அறுபத்திநான்கு கோடி யோகினி கணங்களும், அந்த யோனி கணங்களை சார்ந்துள்ள ஒரு லக்ஷத்திற்கும் மேல் அதிகமான யோனிமார்கள் கூடி.
,,, மணிதீபம்,,
என்கிற கும்பனத்தில் ஸ்திதி கொள்ளப்பட்டு, இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டித்த பரமசிவனின் புருஷத்தி ஆகிய அன்னை ஆதிபராசக்தி அந்த கும்பனத்தில் கால்மேல்கால் போட்டுகொண்டு அமர்ந்து கொண்டு ஒரு அகங்காரியாக. உலகத்தை இரக்ஷித்து ரக்ஷித்து வருகின்றாள்.

அந்த அகம்பாவத்தோடு அமர்ந்திருக்கும்,அகங்காரியை லோகமாதாவை மூம்மூர்த்திகளாகிய ப்ரம்மாவு, விஷ்ணு, சிவன் மூவரும்கூடி நித்யமும் உபாஸனாமந்திரங்களை உபாஸித்து வருகின்றாள்கள் என்பதுதான் சனாதனதர்ம்ம ஐதீகம்.

அந்த ஸ்ரீசக்ரத்தில் அமர்ந்துகொண்டு லோகமாதா ஆதிபராசக்தி அமர்ந்துகொண்டு தேவாலயக்ஷேத்ரங்களில் க்ஷேத்ரபூஜகன்மார்கள் சொல்கின்ற வேதமந்திரங்கள் கேட்டு சந்தோஷத்தோடுகூடி கண்களை திறந்தும், மூடியும் சிமிட்டியும் தேவாலயக்ஷேத்ரங்களில் ஸ்திதி செய்த விக்ரகம் மூலம் ஒரு காந்தசக்தியை (Cosmetic power) தருகின்றாள், அந்த காந்தகசக்தியை வெளியேறாமல் தன்னை தொழும் பக்தஜனகோடிகளுக்கு , ஒரு உத்வேக சக்தியை கொடுக்கின்றாள். ஸ்ரீசக்ரகம்மூலம் விக்ரகத்தின் வழியாக
இதை உள்வாங்குகின்ற பக்தன்மார்கள் கோரிக்கைகளை என்னன்ன வழியில் செய்தால் கோரிக்கைகள் நிறைவேறுகள் நிறைவேறும் என்பதை அவர்களாகவே உணர்ந்து கொள்கின்றார்கள்!
நித்யமும் தேவாலயக்ஷேத்ரங்கள் தர்ஸனம் செய்கின்ற பக்தஜனங்களுக்கு தெரியும் அந்த எனர்ஜி சக்தியை!
மாதவிலக்கான தீண்டாரீ ஸ்த்ரீமார்கள் ஏன் தேவாலயங்களில் செல்லகூடாது?
அவர்கள் தேவக்ஷேத்ரங்களில் உள்ளே செல்லும்போது ஒருவிதமான நீச்ச வாசனை அந்த ஸ்ரீசக்ரத்திலிருந்து உருவாகின்ற சக்தியை தடுக்கும்.
அதனால்தான் மாதவிலக்கான காலங்களில் ஸ்த்ரீமார்கள் உள்ளே அனுமதிக்க அனுமதி மறுக்க படுகின்றது.

இரஷ்ய தேஸத்தின் கணித ஸாஸ்த்ரஞ்சன் Alexy clive chev புகழ்பெற்ற தனது சுயசரிதையில் பாரதீய தேஸங்களிள் ஐந்தவ விஸ்வாஸத்தின் படி நிர்மாணங்கள் செய்துள்ள தேவாலயக்ஷேத்ரங்கள் ஸ்ரீசக்ரம் என்பது ஒரு மிகப்பெரிய வேண்டுதல்களை, ஏற்றுவாங்கி அந்த வேண்டுதல்களையெவவ்வாம் நிறைவேற்ற கூடிய சக்திகளை அந்த சக்ரம் தருவது என்பது ஒரு அதிசயத்திலும் மிகப்பெரிய சம்பவம்தான் இதுவும் ஒரு ஸாஸ்த்ர கணிதம்தான்,
என்று தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

இவன்
அவிட்டத்தோன்

2குருவாயூர் அப்பனின் நாராயணியம் உருவான அருமையான வரலாறு….

அந்த காலத்தில் எந்த நோய்க்கும் நாட்டு வைத்தியம் தானே  மந்திரத்தில் வியாதி குணம் ஆனவர்களும் உண்டு. பத்தியத்தில் வியாதி குணமாகும். கோவில்களில் மண்டல விரதமிருந்து பெற்ற ஈஸ்வர பிரசாதமும் மருந்தாக வியாதி நிவாரணம் செய்திருக்கிறதே.

மலையாள தேசத்தில் ஒரு ஆச்சார நம்பூதிரி குடும்பம். அதில் ஒருவருக்கு உடலில் பெரும் வாத நோய் கண்டது. அந்த நம்பூத்ரி கல்விமான். உயர்ந்த கௌரவமான மதிப்பான குடும்பம்.

கர்மா அவருக்கு இப்படியொரு வியாதி. எங்கெங்கோ மருத்துவர்களிடம் அலைந்தும் பயனில்லை. கொஞ்சம் பூஸ்திதி உண்டு.

ஒரு நாள் அவர் வேலைக்காரனை கூப்பிட்டு ”ஏ குட்டா, உடனே போ. யாரோ ஜோசியர் ஊருக்கு வந்திருக்கிறாராம். பல வியாதிகளுக்கு அவரிடம் மருந்து இருக்கிறதாம். உங்கள் உடம்பை பற்றி கேட்கக்கூடாதா என்று தெரிந்தவர்கள் என்னிடம் சொல்கிறார்கள்.

என்னால் நடக்க முடியவில்லை. நீ அவரைப் பார்த்து என் நிலைமையைச் சொல். அவரிடம் ஏதாவது மருந்து வாங்கி வா” என்று கோபாலனை அனுப்பினார்.

அவர் வேலைக்காரன் கோபால குட்டன் ஜோஸ்யரிடம் சென்றான்.

வேலைக்காரன் விவரங்களை சொல்லி ஜோசியர் என்ன சேதி சொன்னார் என்று அறிந்துகொள்ள ஆவலுடன் பட்டத்திரி என்கிற வியாதிக்கார நம்புதறி காத்திருந்தார். ஏன் அவன் இன்னும் வரவில்லை?

சற்றைக்கெல்லாம் அந்த வேலைக்காரன் அலறி அடித்துக் கொண்டு அவரை நோக்கி ஓடி வந்து விட்டான். அவனைக் கண்ட பட்டத்ரி

”என்னப்பா ஆயிற்று? எனக்கு ஏதாவது நிவாரணம் உண்டு என்று ஜோசியர் சொன்னாரா? ”

” ஐயா, அவர் உங்களுக்கு வியாதி குணமாகும். கண்டிப்பாகப் பரிகாரம் இருக்கிறது” என்று கூறினார்.

”அப்படி என்ன ஜோசியர் சொல்லி விட்டார்?”

கோபாலன் ஜோதிடர் சொன்ன விவரமெல்லாம் சொல்லி ”புனிதமான க்ஷேத்ரமான குருவாயூரில் நீங்கள் மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடினால் வியாதி குணமாகுமாம்” என்றான்.

”குருவாயூர் கோயிலில் ஒரு சின்னக் குழந்தை அசுத்தம் செய்து விட்டாலே மூன்று மணி நேரத்திற்குக் கோயில் கதவை மூடி புண்யாகவாசனம் செய்துவிட்டுத்தான் பிறகு திறப்பார்கள்.

அப்பேர்ப்பட்ட பெருமை மிகுந்த கோயிலில், உங்களை மீனை நாக்கில் தொட்டுப் பாடச் சொல்கிறார்.

அப்படிச் செய்வதற்கு நீங்கள் மேல்புத்தூரிலேயே உங்கள் வாத ரோகத்துடன் இருக்கலாம்.

நானே உங்களைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஜோசியர் இப்படிச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நான் போயே இருக்க மாட்டேன்.

நான் ஏன் தான் அந்த ஜோசியரிடம் போனேனோ?” கோபால குட்டன் அழாத குறையாக சொன்னான்.

பட்டத்திரி யோசித்தார். அவருக்கு சிரிப்புவந்தது. ஜோசியர் கூறியதன் உட்பொருள் புரிந்தது.

மனம் சந்தோஷம் அடைந்தது. ”கோபாலா, வாடா, நாம் இன்றே குருவாயூர் போகணும். பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கோ”

”ஏய், இதென்ன அக்கிரமம். நான் வரமாட்டேனாக்கும்” என்றான் கோபாலன்

. உங்களையும் போக விட மாட்டேன். அதெப்படி நீங்கள் குருவாயூர் க்ஷேத்ரத்தில் கோவிலுக்குள்ளே போய் அனாசாரம் பண்றது.

நான் ஒப்புத்துக்க மாட்டேன்.

உங்களுக்கு வேணா எப்படியாவது வியாதி குனமாகாதா என்று இப்படி செய்ய பிடிக்கலாம். அந்த பாபத்துக்கு நான் துணை போக விரும்பலே.” ரொம்ப கோபத்துடன் கோபாலன் கத்தினான்.

பட்டத்திரி என்ன சமாதானம் பண்ணியும் கோபாலன் கோபம் அடங்கவில்லை. ” ஜோசியன் சொன்னதுக்கு வேறே அர்த்தம்டா கோபாலா” என்று திருப்பித் திருப்பி சொல்லி கடைசியில் கோபாலன் ஒரு வழியாக அமைதியானான்.

”ஜோசியன் சொன்னது நீ புரிஞ்சிண்ட மாதிரி இல்லே. அதற்கு அர்த்தம் வேறே.

”மத்ஸ்யம் தொட்டுப் பாடணும்” என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? சாதாரண மீன் என்று நீ ஏன் நினைக்கிறே?

பகவான் குருவாயூரப்பனின் தசாவதாரத்திலே முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம். அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான்.

”மத்ஸ்யம் தொட்டு” என்றால் மத்ஸ்ய அவதாரத்திலிருந்து தொடங்கி தசாவதாரம் பத்தையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார்.

அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரங்களைப் பற்றி குருவாயூரில் பாடப் போறேன்

. நீ என்ன பண்றே. என்னை இப்பொழுதே குருவாயூருக்கு அழைத்துச் செல்.” அப்பாடா, கடைசியில் சுலபமாக வாத நோய் குணமாக ஒரு பரிகாரம் கிடைத்ததே என்ற சந்தோஷம் அவருக்கு.

”ஒ, நான் ஒரு முட்டாளாக்கும் . இப்படி ஒரு அர்த்தமோ இதுக்கு. அதுவும் நம்பூதிரி, அதுவும் குருவாயுரப்பன் கோவில்லே உள்ளே மீனை வாயில் வைத்துக்கொண்டு…………” என்று அந்த ஜோசியன் சொன்னதை வேறே மாதிரி புரிஞ்ஜிண்டுட்டேன். நம்பிவிட்டேன் . அதாக்கும் கோபம் வந்துது. ”

பட்டத்திரிக்கு இன்னுமொரு சந்தோஷம் என்ன வென்றால் அவருடைய குரு கற்றுக் கொடுத்த சமஸ்கிருத மொழியில் பாட அந்த பகவானே நம்மைப் பணித்திருக்கிறார் என்று.

அவர் கண்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தது.. அந்த குருவாயூரப்பனைப் பாடப் பாட , நம் ரோகம் நிவர்த்தி ஆகும் என்று நினைத்ததுமே மனம் ஆனந்தக் கூத்தாடியது. பகவானின் பெருங் கருணையை எண்ணி மனம் பரவசம் அடைந்தது.

”நாராயண பட்டத்திரிக்கு எந்த மருந்திலும் குணமாகாத வாத நோய், வெறுமே பாட்டுப்பாடுவதால் மட்டும் குனமாகப்போகிறதா என்ன ? ” என்று ஏற்கெனவே நொந்து போயிருந்த அவர் குடும்பம் ,உறவினர்கள் அவநம்பிக்கையுடன், வெறுப்புடன், வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர்.

நடக்க முடியாதே பட்டதிரிக்கு. ஒரு பத்துப் பதினைந்து பேர் அவரை ஒரு பல்லக்கில் தூக்கி வைத்துத் கொண்டு குருவாயூர் சென்றனர். ”எப்போ குருவாயூர் வரும், எப்போ நாராயணனைப் பார்ப்போம்” — பட்டத்ரியின் மனம் பல்லக்கை விட வேகமாகச் சென்றது.

குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக மனம் ஏங்கியது. மனத்தில் இருந்த பயம் விலகியது.

இந்த ரோகத்தால் இனி நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் குட்டிக் கிருஷ்ணன் நம்மைப் பார்த்துக் கொள்வான்.

நாளைக் காலை நிர்மால்ய தரிசனத்தின்போது நாம் அந்த குருவாயூரப்பன் சன்னதியில் இருப்போம்” என்று எண்ணிக் கொண்டார்.

அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர்.

அவரை நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர். ” ஆஹா என் பகவானே ஸ்நானம் செய்த குளமாச்சே இது ? இதில் ஸ்நானம் செய்ய நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்” — அவர் மனம் துடித்தது.

புது வஸ்த்ரம் உடுத்தினர். அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி, பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர்.

தினமும் காலையில் மூன்று மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்கு வைகுண்டத்திலிருந்து அந்தர்யாமியாக (கண்ணுக்குத் தெரியாமல்) வந்து குருவாயூரப்பனை தொழுது செல்லும் முப்பத்து முக்கோடி தேவர்கள், அனைவரும் அவனைத் தொழ வருவார்களே. அவர்களில் ஒருவராக பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார்.

இவரைக் கண்ட தேவர்கள், இவரால் நாராயணியம் என்னும் மாபெரும் க்ரந்தம் ஒன்று பின்னால் உருவாகப் போகிறது என்பதை உணர்ந்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.

குருவாயூரப்பனின் தரிசனம் ஒரு விநாடி நேரமாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நடுவே பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார்.

அப்பொழுது அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அங்குள்ள திண்ணையைக் கண்டனர்.

பகவானுக்கு வலப் பக்கம் தமக்கு இடப்பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர்.

பட்டத்ரி முதன்முறையாக குருவாயூர் வருகிறார். அவர் இதற்கு முன் குருவாயூரப்பனைப் பார்த்தது இல்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறார்.

அவரது உடல் பரவசத்தால் சிலிர்த்தது. சாதாரண மானிடனான என்னை அந்த பகவானின் கருணையன்றி வேறு எது இங்கு அழைத்து வரமுடியும்?

இவரது திவ்ய ஸ்வரூபத்தைக் காண கண் கோடி வேண்டுமே? எத்தனை அழகு? எவ்வளவு தேஜஸ்? இப்பேர்ப்பட்ட அழகு வாய்ந்த இவரைப் பாட என்னால் முடியுமா? அதற்கு நான் தகுதி உடையவனா? அந்த பகவான் என்னை ஏற்றுக் கொள்வானா? அவர் என்னையும் தன் சரணாரவிந்தங்களில் சேர்த்துக் கொள்வானா? இப்படி பட்டத்ரி மனத்திற்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே அந்த குருவாயூரப்பனைக் காணத் துடிக்கிறார் பட்டத்திரி.

அந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டு, ” என் கண்ணா” என பக்தியுடன் கதறினார். சப்தம் பக்தியோடு வெளிவந்தது. அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. குருவாயூரப்பன் அவருக்கு செவி சாய்த்தானா?

பட்டத்ரி அந்த மண்டபத்தில் உட்கார்ந்தவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை.

அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது. பட்டத்ரிக்கோ வாத ரோகம் . தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை.

அப்போது பட்டத்ரி அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு, ”ஏ உன்னிக் கண்ணா! கிருஷ்ணா! பரந்தாமா!” என்று கதறுகிறார்.

” இதோ பார் குட்டி கிருஷ்ணா உன் திவ்ய தரிசனத்தைக் காணாமல் என்னால் எப்படி நாராயணியம் எழுத முடியும் னு நீ நினைக்கிறாய்? அதனால் நீ முதல்லே எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத் தா” என்று அழுது கண்ணீர் மல்குகிறார்.

அதற்கு குருவாயூரப்பன் ஒன்றும் பேசவில்லை. வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தி கண்ணனிடம்

” சரி கிருஷ்ணா, நீ எனக்கு ஒன்றுமே செய்ய வேண்டாம். என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய். கழுத்தையாவது திருப்பி உன்னைப் பார்க்க அனுகிரகம் செய்.

நான் இப்போ தான் முதன் முதலில் குருவாயூர் வந்திருக்கிறேன். இதற்கு முன் உன்னைப் பார்த்தது கூட கிடையாது. என் காதால் மட்டுமே இதுவரை உன் புகழைக் கேட்டிருக்கிறேன்.

உன் சௌந்தர்ய ரூபத்தைப் பார்க்காமல், உன் மேனி அழகைக் காணாமல், நீ சூடி இருக்கும் ஆடை, ஆபரணங்களைக் காணாமல், உன் தேஜோமய திவ்ய சொரூபத்தைக் காணாமல், கருணா கடாக்ஷத்தைக் காணாமல் நான் எப்படி அப்பா உன் பெருமையைப் பாட முடியும்?

உன் புராணமாகிய நாராயணியத்தை, நான் எதை நினைச்சு எழுத முடியும்? நீயே சொல்லு, அதனால் தான் கேட்கிறேன் நீ உன் தரிசனத்தை முதலில் எனக்கு கொடு” என்று மனம் குழைய கெஞ்சிக் கேட்டார் .

குருவாயூரப்பன் சும்மாவா இருப்பான் ?

அவனுக்கு நாரயணீயம் வேண்டாமா. அதற்காக தானே இத்தனை வேலை செய்து, அவருக்கு வாத ரோகத்தை வேறு கொடுத்து இழுத்து வந்திருக்கிறான். முதன் முதலில் பட்டத்ரியிடம் பேசுகிறான் .

”நாராயண பட்டத்திரி, நீ நினைக்கிற மாதிரி எல்லாம் என்னால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது. என்றைக்கு நீ இங்கே வந்த காரியம் முடிவடைகிறதோ, அன்றுதான் உன் வியாதி நீங்கும் சரியா ?”

” அடே, குட்டி கிருஷ்ணா, எனக்கு உன் தரிசனம் எப்போது கிடைக்கும்? ”

” பட்டத்ரி, நீ உன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு உன்னுடைய கழுத்தை சாய்த்துதான் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்?

என் கழுத்தின் ரெண்டு பக்கமும் நன்றாகத்தானே இருக்கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும்அல்லவா ?. பட்டத்திரி.

நானே என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன். என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்து, நீ நாராயணியம் பாட ஆரம்பி” என்று கூறி கிருஷ்ணன் அனுக் ரஹம் செய்கிறார்.

(இப்பொழுதும் குருவாயூர் ஆலயத்தில் ‘நாராயண பட்டத்ரி மண்டபத்தில்’ உட்கார்ந்து கொண்டு பார்த்தால் நமக்கு அந்த குருவாயூரப்பன் தெரிய மாட்டான். ஆனால் குருவாயூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து நம்மைக் காணமுடியும்.)

அப்பேர்ப்பட்ட புனிதமான இடமானதால் இப்பொழுது அங்கு ஒரு செப்புப் பட்டயம் வைத்து, ‘நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம்” என்று எழுதி வைத்திருக்கின்றனர்.

சாட்சாத் அந்த குருவாயூரப்பனே, பட்டத்ரி நாராயணியம் எழுதி முடித்தவுடன், ”மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி , இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம். ஆனால் இன்று முதல் இந்த இடம் உனக்கு மட்டுமே சொந்தம். இதற்கு இனிமேல் ”பட்டத்ரி மண்டபம்” என்று பேர்” குருவாயுரப்பனே கூறினார்.)

எந்த காவியத்துக்கும் இல்லாத பெருமை இந்த நாராயணியத்திற்கு உண்டு.

என்ன வென்றால், இந்த நாராயணியம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது.

இது முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணை போல் அமைந்திருக்கிறது.

” நான் நாராயணியம் எழுத ஆரம்பிக்கட்டுமா? என்று பட்டத்ரி கேட்க,

” உம். எழுது. நான் கேட்க ஆவலாக இருக்கிறேன்” என்று குருவாயூரப்பன் கூறுகிறான்.

” நான் நாராயணியத்தைத் தொடங்க வேண்டும் என்றால் சில பல நிபந்தனைகள் உள்ளன. அவற்றை எல்லாம் நீ பூர்த்தி செய்தால் மட்டுமே என்னால் நாராயணியம் பாட முடியும். இல்லையென்றால் நான் ஊருக்குச் செல்கிறேன்”

ஒரு முக்ய விஷயம். மற்றவர்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் சில சமயங்களில் தங்கள் இஷ்ட தெய்வத்தோடு பேசியிருக்கிறார்கள்.

ஆனால் குருவாயூரில் பட்டத்ரி நூறு நாளும் தொடர்ந்து குருவாயூரப்பனோடு பேசும் மகா பாக்யத்தைப் பெற்றார்.!

பேசியது மட்டுமல்ல ஒரு நண்பனாக, தந்தையாக, குழந்தையாக, பணியாளாக என அத்தனை பாவங்களிலும் பேசுகிறார்.

குருவாயூரப்பன் ப்ரத்யக்ஷ தெய்வம்