ப்ரஸ்னஜோதிஷ பலன்கள் 2 .

.

Website

www.keraliyaprashnajyothisham.co.in

1 ஒரு ஜாதகத்தில் இலக்னக்ஷேத்ரஸேகன் எந்த பாவகத்தில் ஸ்திதி கொண்டுள்ளாரோ? அந்த பாவகவத்தின் காரகத்துங்கள் மூலம்தான் ஜாதகருக்கு விஜயங்கள் கிட்டும், ஒருவேளை ஜாதகரின் இலக்னஸேனன் ஆறாம்பாவகத்தில் இருந்தால் ஜாதகருக்கு, கடன்களோ, ரோகங்களோ கூடியிருக்கும்.
அதேபோல்தான் ஒருவேளை ஜாதகருடைய இலக்னக்ஷேத்ரஸேனகன் பூர்வபுண்ய பாவகமான ஐந்தாபாவகத்தில் இருந்தால் ஜாதகருக்கு அவருடைய சஞ்சிதகர்மா என்கிற பூர்வபுண்ய அடிஸ்தானத்தில்தான் ஜீவிதம்காலம் அமையும். ஒருவேளை அந்த பூர்வபுண்யபாவகம் இலக்னஸேனனுக்க்கு சத்ரு பாவகம் ஆயிருந்தால் ஜாதகரின் பூர்வபுண்ய கர்ம்மங்கள் குறைவாக இருக்கும், அதற்கேற்றாற்போல் தற்போதைய ஜீவிதம் அமையும். சில ஜாதகருக்கு இலக்னக்ஷேத்ரத்திற்கும் மற்றும் இலக்னஸேனனுக்கும் ஐந்தாம்பாவகம் மித்ரக்ஷேத்ரம் ஆகி அந்த பாவகத்தின் அதிபதி உச்சக்ஷேத்திரம், மித்ரக்ஷேத்ரம், நவாம்ஸகக்ஷேத்ரத்தில் வர்க்கோத்தமம் போன்ற ஸ்திதி அமைந்திருந்தால், ஐந்தாம்பாவகம் புத்திரபாக்கிய பாவகம் அல்லவோ! ஆதனால் அந்த பாவகஸேனன் நல்ல ஸ்திதியில் இருந்தால் ஜாதகருக்கு பிள்ளைகள் பிறந்து வளரும்போது தான் ஜீவிதத்தில் விஜயங்கள் ஜாதகர் பெறமுடியும்.

5 இலக்னக்ஷேத்ரம், இலக்னஸேனன், ஐந்தாம்பாவகஸேனன், போன்றவர்கள் நீச்சக்ஷேத்ரம், சத்ருக்ஷேத்ரம், சூரியனோடுகூடி மௌடில்யகதோஷம் போன்ற தொடர்புகள் உண்டாயிருந்தால் ஜாதகர்கள் தெரிந்துகொள்ளலாம் தங்களுடைய கழிந்த சஞ்சிதகர்மாவில் தங்களுக்கு பூர்வபுண்ய பலம் குறைவு, தாங்கள் இந்த ஜென்மத்தில் ஜீவிதகாலம் முழுவதும் துரிதங்கள் அனுபவிக்க பிறந்தவர்கள் என்று. அறிந்துகொள்ளலாம்.

2 இலக்னக்ஷேத்ரத்தின் யோகாதிபதிகள் ஏது பாவகக்ஷேத்ரங்களில் அதற்கேற்றாற்போல் தான் யோகங்கள் கூடும், குறையும். ஒருவேளை யோகாதிபதிகள் 6, 8 12 போன்ற அனிஷ்டகக்ஷேத்ரங்களில் ஸ்திதி கொண்டிருந்தால் ஜாதகர் யோகத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். உதாகரணத்திற்கு கன்னிலக்னக்ஷேத்ரம், அது உபயராசி அல்லவோ! அப்போது அதற்கு ஒன்பதுக்குடையவர் யோகாவான், சுக்கிரன் யோகவான் ஆகின்றார். அவர் இரண்டாம்பாவகத்தில் இருந்தால், ஒன்பதாம்பாவகஸேனன் இரண்டில், ஒன்பாதாம்வகம் தந்தை ஸ்தானம் அல்லவோ! அப்போது சுக்கிர தெஸாகாலங்களில் தந்தையுடைய ஆஸ்திகள் ஜாதகருக்கு அனுபவிக்க வேண்டிவரும்.

3 இலக்னஸேனன், மற்றும் மற்றும் இராசிஸேனன் இவர்கள் கேந்திரக்ஷேத்ரங்களில் நின்றிருந்தாலும், யோகாதிபதிகள் கேந்திரக்ஷேத்ரங்களில் நின்றிருந்தாலும் ஜாதகருக்கு கிடைக்ககூடிய யோகபலன்கள் கூடிகூடி வரும்.

4 6.8.12 ஆகிய அனிஷ்டகக்ஷேத்ரங்கன்மார்கள் என்கிற மறைவுக்ஷேத்ர அதிபன்மார்கள் எந்த பாவகத்தில் ஸ்திதி கொண்டிருந்தாலும் தோஷங்கள் மட்டுமே கொடுக்கும்.
அதேபோல் தான் யோகவான்மார்கள் மறைவுக்ஷேத்ரங்களில் ஸ்திதி கொண்டிருந்தாலும் யோகபலன்கள் ஜாதகருக்கு கிட்டாதுபோகும்.

இவன்
அவிட்டத்தோன்

.

என்னதான் இந்த விபரீதராஜயோகங்கள், ஜாதகத்தில் அனிஷ்டகக்ஷேத்ராதிபன்மார்கள்(6.8.12 மறைவுக்ஷேத்ரதிபன்மார்கள் ) உருவாக்கின்ற ஒரு மிகப்பெரிய யோகம்தான், விபரீதயோகம், சாதாரண ராஜயோகத்த்திற்கும், விபரீதமான யோகத்திற்கும் வித்தியாஸங்கள் என்னவென்றால் சந்திரனும், குருவும் சேர்ந்துகொண்டு உண்டாகின்ற யோகம் என்பது சமூகத்தில் அந்தஸ்து, தனம் போன்றவைகள் போன்றவை தானாகவும் தாங்களாகவும் ஜாதகரை தேடிகொண்டு வரும், அதற்கு தெய்வானூக்ரகம் இருக்கவேண்டும். ஆனால் விபரீதயோகம் என்பது ஜாதகர்கள் தங்களுடைய தனிமனுஷ்ய சாமர்த்தியம் மூலம் ஒரு சாம்ராஜ்யம் சிருஷ்த்து உண்டாக்குவதுதான் ஆனால் அதில் தெய்வானுக்ரகங்கள் இருக்காது, அதற்கும் கிரக அமைப்புகள் ஜாதகத்தில் இருக்கவேண்டும்.

அனிஷ்டகக்ஷேத்ரங்கள் ஆன 6.8.12
இராசி அதிபன்மார்கள் ஜாதகத்தில் பரஸ்பரம் இராசிக்ஷேத்ர பரிவர்த்தனை அடைந்திருக்கவேண்டும்.
அதாவது 6.8.12 அதிபன்மார்கள் ஜாதகக்ஷேத்ரங்களில் மாறிமாறி இருக்கவேண்டும்.

உதாகரணத்திற்கு மேடலக்னக்ஷேத்ரம் ஆறாவது அதிபர் புதன், பன்னிரண்டாம் அதிபர் வியாழம், அந்த குருவானர் கன்னியிலோ அல்லது மிதூ இராசியிலோ இருக்கவேண்டும், அதேபோல் புதன், மீனம் அல்லது தனூவில் இருக்கவேண்டும் ஆனாலும் மேடலக்னத்திற்கு அஷ்டாமாதிபதியும் இலக்னக்ஸேனகனும் குஜன் அல்லவோ ஆகவே அஷ்டமக்ஷேத்ரத்தை கணக்கில் கொள்ளமுடியாது.

இவ்வாறு கிரகங்கள் அனிஷ்டகக்ஷேத்ரங்களான 6.8.12 பாவகக்ஷேத்ரங்களில் மாறிமாறி ஸ்திதி கொண்டிருக்கவேண்டும்.
இதை நவாம்ஸகக்ஷேத்ரங்களில் ஒரு வீடாவது 6.8.12 பன்னிரண்டு பரிவர்த்தனை அடைந்திருக்கவேண்டும்.
இந்த விபரீதயோகத்தைதான்,

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் விபரீதயோகம் ஜோதிஷஸாஸ்த்ரத்தில் சொல்லப்படுகின்றது

ஒரு இராஜயோகம் உள்ளவர்கள் இராஜனை போல் சகலவிதமான சம்பத்துக்கள், சௌபாக்கியங்களும் ஜீவிதகாலங்களில் பெற்றுகொண்டு ஒரு சுகஜீவிதம் ஜீவிப்பதுதான் இராஜயோகம் ஆகும்.
ஆனாலும் விபரீதயோகம் உள்ளவர்கள் தங்களது இளமையில் ஜீவிதத்தில் கடுமையான கஷ்டப்பாடுகள் அனுபவித்து ஜீவிதத்தில் விஜயம் என்பது தனமே ப்ராதனம் என்று தீர்மானித்து அவர்கள் தனம் சம்பாதிக்க எந்தவிதமான கீழ்த்தரமான செயல்களையும், வஞ்சகங்களையும் செய்து தனவான் ஆகிவிடுவார்கள்.
கள்ளகடத்தல், லாகிரி போதை வஸ்த்துக்கள் விற்பனை, ஸ்த்ரீபுருஷ விபச்சாரங்கள் ( immoral trabic)

எந்தவிதமான செய்து தனத்தை சேர்த்துகொண்டு சமூகத்தில் தனக்குதானே ஒரு சாம்ராஜ்யம் உருவாக்கி சமூகஅந்தஸ்து உருவாக்கி விடுவார்கள்
இந்த விபரீதயோகம் அனிஷ்டகக்ஷேத்ரங்கள் (6.8.12)அதிபன்மார்கள் பரிவர்த்தனை அடைந்திருந்தால் அந்த அனிஷ்டகக்ஷேத்ரங்கள் அதிபன்மார்கள் தெஸா வந்தால் மட்டுமே விபரீதயோகம் ஜீவிதத்தில் கிட்டும்.

 

இவன்
அவிட்டத்தோன்

.

ஜோதிஷ ஸாஸ்த்ரம் என்பது, மனுஷ்ய ஜீவிதத்தில், ஜீவிதமாய் அதீத பந்தம் ஸ்தாபித்து முன்னேறுகின்ற ஒரு தத்துவஸாஸ்த்ரம் கூடியது தான் பாரதீய ஜோதிஷ ஸாஸ்த்ரம்.

அதனால்தான்,
ரிக், யஜுர், சாம, அதர்வண என்கின்ற நான்கு சதுர்வேதங்களின்,, கண்,,
என்கின்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கின்றது,

ஜனன ஜீவிதம் முதல் மரண காலம் வரை மனுஷ்யர்கள் பாவி, வர்த்தமானம் பூதம் என்கின்ற மூன்று காலங்களையும் காட்டுகின்றது, பாரதீய ஜோதிஷஸாஸ்த்ரம்,

கடல் ஓரத்தில் நின்றுகொண்டு, கடலையையும்., அலைகளையையும், கப்பல்களையும் பார்த்துக்கொண்டிருக்கும், மனுஷ்யர்கள் எப்போதும்.
புறங்கடல்,,
என்கின்ற, கடலின் உள்ளேயும், அந்த கடலுனுள்ளில், எத்தனையெத்தனை ஜீவராசிகள் வாழுகின்றன?
எத்தனையோ விருஷங்கள் வாழ்கின்றது?
எத்தனையோ பர்வதங்கள் கடலிளினுள்ளில், உள்ளது என்பதைபற்றி யாரும் சிந்திப்பதில்லை,

அதேபோல் தான் ஜோதிஷ சாஸ்த்ரம் உள் ஆழத்தை ஆராயமல், தற்போதைக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு பரிகாரங்கள் செய்து தற்காலிக நிவர்த்தி ( temperary solution) ஆக்கி செல்கின்றனர்,

பாரதீய தேஸத்தில் ஜோதிஷத்தின் ஆரம்பம் வேதங்களில்தான் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

அதன்பிறகு பாரதீயர்கள் செய்கின்ற எல்லா நன்மைகள் கூடிய சுபகார்யங்களிலும் ஜோதிஷம் பங்கு வகிக்கின்றது,

கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டில், ஜீவித்திருந்த பராஸாரன் ரிஷி, தொடர்ந்துவந்த வராஹிமிஹிரர், தொடங்கி தலைமுறை தலைமுறையாக கைமாறி, லக்ஷோபலக்ஷம் ஜோதிஷ மகத்துவங்கள் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டு, இன்றைய இருபத்தியோறாம் நூற்றாண்டு காலகட்டத்திலும் ஜோதிஷ ஸாஸ்த்ரங்கள் ஆராய்ந்துகொண்டிருக்க படுகின்றது.

இந்த உலகத்தில் என்னெவெல்லாம் சம்ஸ்காரங்கள் மாற்றங்கள் வந்தாலும், மனுஷ்யர்கள் ஜீவிக்கும் காலம் வரையிலும் ஜோதிஷ ஸாஸ்த்ரம் புதுபுது பரிமாணங்களில் தோன்றி காட்சியளிக்கும்,

இப்படி ஜோதிஷ சாஸ்த்ரம் நிலைநின்று போகக்கூடிய காரணம் என்ன? என்று ஆராய்ந்தால், மனுஷ்யர்கள்! அவரவர்கள் எதிர்காலங்கள் குறித்து சிந்திக்குகையும், ஒருநாள் இல்லாவிட்டாலும், ஒருநாளாவது, தங்களது ஜீவிதம் நன்றாக வரும் என்கின்ற விஸ்வாஸங்கள்!

ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாளாவது., இந்த பட்டுபோன மரமும் பூக்கும்?!என்கின்ற மனுஷ்யர்கள் ஆழ்மனதில், புரையோடி கொண்டிருக்கும், ஆத்மவிஸ்வாஸம்,

அவனவர்கள் விஸ்வாஸங்கள், அவரவர்களை ரக்ஷிக்கும்!

விஸ்வாஸங்கள் ஜோதிஷஸாஸ்த்ரத்தின் அடிஸ்தானம்,

இன்றைய பாரதீய சனாதான தர்மம், அந்த தர்மத்தின்படி வந்த வேதங்கள், அந்த வேதங்களை தொடர்ந்து வந்துள்ள ஜோதிஷ சாஸ்த்ரம், இவைகள் இந்த இருபத்தியோறாம் நூற்றாண்டில், பல விதேஸ சாம்ராஜ்யங்களும் விஸ்வாஸமாகி அதன்படியே நடக்கின்றனர்,

ஆனாலும் வருத்தபடக்கூடிய விஷயம், என்னெவென்றால், அறுபது ரூபாய் குடும்பஜோதிடம், என்கின்ற புத்தகம் வாங்கி படித்துவிட்டு, ஜோதிஷன்,
ஜோதிஷ வித்யாதிபதி,
ஜோதிஷ சிரோன்மணி.,
அகில உலக ஜோதிஷ சங்கத்தின் தலைவர் நான்தான்!

வட்டசெயலாளர் வண்டுமுருகன்!
சதுரசெயலாளர் சங்குமுருகன் என்று தம்மைதாமே பெருமைபடுத்தியும், தங்களை தாங்களே சேற்றை வாரி, அடித்து தரம்தாழ்ந்து போகின்றார்கள்!

அது என்ன ஜோதிஷ சாபமோ? தெரியவில்லை!

நான் பார்த்தவரையில் ஜோதிஷன்மார்கள் தம்மில் பரஸ்பரம் சகோதரத்துவம் கூடிய ஒற்றுமை கிடையவேகிடையாது.

ஜோதிஷன்மார்கள் வீடு வைக்க வங்கிகளில் கடன் தரமாட்டார்கள்,
அரசாங்கம் வயது மூப்பு வந்தால், எந்த ஜோதிஷன்மார்களுக்கும் முதியோர் தொகை கொடுக்க மாட்டார்கள்!

ஜோதிஷன்மார்கள் தம்மில், சாதி, மொழி, மதம் போன்ற வர்க்கீயத பேதங்கள் தேவையா?

ஜோதிஷமார்கள் தம்மில் பிராஹ்மணன், சண்டாளன் போன்ற வர்ணபேதம் தேவையா?

எல்லோரும் ஒரு தாய் பெற்ற சகோதரன், சகோதரி,
எங்கள் சாதி மற்றவர்களுக்கு ஜீவிதத்தில் உண்டாககூடிய பாவி பூத, வர்த்தமானம் காலங்களை எடுத்துசொல்கின்ற,

தெய்வக்ஞன், என்கின்ற சாதி நாங்கள், என்று அகம்பாவத்தோடு சொல்லவேண்டும்.

அவன்தான் ஜோதிஷன்,
அகம்பாவம் ஒவ்வொரு ஜோதிஷ முகங்களுக்கும் அலங்காரம்,

அதைவிட்டு, ஒரு ஜோதிஷன், ஏதோ கருத்து சொன்னால் அவர்களை கேலி செய்து, அவர்கள் மனம் புண்படும்படி அவர்களை நோகித்தல் தவறானது,

யார் உண்மையான ஜோதிஷன்?

மகா கவி காளிதாஸன் தனது உத்திரகாலமிருதத்தில், ஜோதிஷனை பற்றி சொல்லும்போது,

ஜோதிஷன் என்பவன்,
என்னதான் கிரகங்கள் அக்குவேறாக ஆராய்ந்து ஜோதிஷ பலன்கள் ஜாதகத்தில் கண்டாலும்,ஜெனனமாகும் ஒரு மனுஷ்ய ஜென்மத்தின் தலைவிதியை தீர்மானிப்பது, தலைவிதியை எழுதிய ப்ரம்மாவிற்கு மட்டுமே தெரியும், அந்த ப்ரம்மாவும் மனுஷ்யர்கள் தலைவிதியை எழுதி முடித்தபின்னர், அந்த தலைவிதியை மறந்துவிடுவார்,

அதையும் மீறி ஒரு தெய்வக்ஞன், ஒரு மனுஷ்யர்களுக்கு எதிர்காலம் பற்றி சரியாக சொல்கிறார்கள் என்றால்? அது அந்த ஜோதிஷன் நித்யமும் ப்ரார்த்திக்கும் உபாஸனா மூர்த்தியின் ப்ரார்த்தனா பலம்கொண்டு, அந்த உபாஸனா மூர்த்தி ஜோதிஷன்மார்கள் நாவில் அமர்ந்து ஜோதிஷம் சொல்கின்றது,

இதைதான் உத்ரகாமிருதத்தில் காளிதாஸன் சொல்லியிருக்கின்றார்,

ஆதலால் ஜோதிஷன்மார்கள், தங்களது , கீழ்த்தரமான சுபாவகுணங்களை மாற்றி, நித்யமும் உபாஸனாமூர்த்தியை ப்ரார்த்தித்தும், ஆவாகித்தும், நீங்கள் நல்ல ஜோதிஷன்மார்கள் ஆக பாருங்கள்!
ஜோதிஷன்மார்களில், உயர்ந்தவர், தாழ்ந்தவர்,
உள்ளார், இல்லாதவர்கள், என்கின்ற பக்ஷாபேதங்கள் பார்க்காமல்,

தெய்வக்ஞன் என்கின்ற ஜோதிஷன்மார்கள்,

ஒரு ஜாதி
ஒரு மதம்!
ஒரு தெய்வம்!!!

என்கின்ற நிலைபாடோடு வாழுங்கள்!
வாழ்த்துங்கள்,
மற்றவர்களையும் வாழவையுங்கள்

வாழ்க ஜோதிஷ ஒற்றுமை!
வளர்க ஜோதிஷன்களின் ஒற்றுமை!!

இவன்
அவிட்டத்தோன்

.

ஆதித்யனான ரவி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இராசிகளில் சஞ்சரிக்கிறார்.

ஆதித்யன் எந்த இராசி தன்னில் சஞ்சரிக்கிறாரோ, அந்த இராசி தான் மாதம்,

உதாகரணத்திற்கு சூரியன் மேஷ இராசியில் உதிக்கிறார் என்றால் அந்த மாதம் மேட மாதம், தமிழில் சித்திரை மாதம், (சைத்ர மாதம்)

சூரியன் கிழக்கே உதிப்பதில்லை,

சூரியன் உதிக்க தொடங்கும் திக்கு கிழக்கு,

அதை வைத்து தான் மற்ற திக்குகளான,

தென்கிழக்கு,(தக்ஷண பூர்வம், அக்னி மூலை)

தெற்கு ( தக்ஷணம், யமன் திக்கு)

தென்மேற்கு (தக்ஷண பஸ்மம், நைருதி மூலை)

மேற்கு (பஸ்சிமம். வருண திக்கு)

வடமேற்கு (உத்திர பஸ்சிமம், வாயு மூலை)

வடக்கு (உத்திரம் குபேர, திக்கு)

வடகிழக்கு (உத்திரபூர்வம், ஈஸான்ய மூலை)

மேலும் காலையில் ஆதித்யன் எந்த இராசியில் உதிக்க தொடங்குகிறதோ அந்த இராசியே நடப்பு மாதமாக கொண்டாலும்.

சூரியன் அந்த இராசியில் நாள் முழுக்க இருக்கபோவதில்லை,

காலையில் சூரியன் கிழக்கே உதிக்க தொடங்கினால்

மூன்று மணி நேரத்திற்கு ஒரு தடவை திக்கு மாறுவார்,

6.00 am to 9.00am. கிழக்கு,

9.00 am to 12noon, தென்கிழக்கு,

12.00 noon. To 15.00pm தெற்கு,

15.00 pm to 18.00 pm தென்மேற்கு,

18.00 pm to 21.00night. மேற்கு,

21.00 night. to 12.00 mit night. வடமேற்கு,

12.00 Mid night. to 03.00 early morning. வடக்கு,

03.00 am to 05.59 am வடகிழக்கு,

இப்படி தான் ஆதித்யன் சஞ்சாரம்,

அதேபோல் ஆதித்யன் ஒவ்வொரு இராசியில் உதிக்க ஆரம்பிக்கும்போது , அவருடைய. பெயர்கள் மாறுபடும்,

அவை,

01.மேஷ இராசியில் சைத்ர மாதம்,
உதயம் தொடங்கும்போது

“அம்சுமான் ” என்ற நாமத்தில் அறியப்படுகிறார்,

02. வைகாசி மாதம்,
” தாதா “

03. ஆனி மாதம்(மிது)
” ஸவீதா “

04.ஆடி மாதம் (கற்கடம்)(தக்ஷணயாய காலம் ஆரம்பம்)

” அரியமான் “

05.ஆவணி மாதம்(சிங்ஙம்)
“விஸ்வான் “

06.புரட்டாசி மாதம்(கன்னி)
“பகன் “

07.ஐப்பசி மாதம்(துலா)
“பர்ஜன்யன் “

08.கார்த்திகை மாதம்(விருச்சி)
” துவஷ்டா “

09.மார்கழி மாதம்(தனூ)
” மித்ரன் “

(பகவான் ஸ்ரீ.கிருஷ்ணன், பகவத்கீதையில் மாதங்களில் நான் மார்கழி,

மலர்களிலே நான் மல்லிகை, என்கிறார்,

ஆகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நாமத்தாலே மார்கழி மாதத்தை, மாதவ மாதம், எனவும் அழைக்கப்படுகிறது)

10. தை மாதம்,(மகரம், உத்தராயண காலம் ஆரம்பம், (மகர சங்கராந்த்ரி) )
” விஷ்ணு “

11. மாசி மாதம் (கும்பம்)
” வருணன் “

12.பங்குனி (மீனம்)
“பூஷா “

இப்படி ஆதித்யன் எந்த இராசியில் உதிக்க தொடங்குகிறரா, அந்த இராசியில் ஆதித்யனுக்கு, என்ன பெயரோ அதை வைத்து தான் ஜோதிஷன்மார்கள் ஆதித்யன் பேர் சொல்ல வேண்டும்,

அதேபோல் அந்த ஆதித்யன் ப்ரஸ்னம் பார்க்கும் நேரத்தில் எந்த இராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த இராசியில் ஆதித்யனுக்கு என்னை பெயரோ அந்த பெயர் படி ஆதித்யன் அழைக்கப்பட வேண்டும்,

உதாகரணத்திற்கு

சித்திரை மாதம் காலை பத்து மணிக்கு.
அதித்யன் தென்கிழக்கு தக்ஷண பூர்வத்தில் சஞ்சரிக்கிறார் (அக்னி மூலை)அங்கே அவருடைய பெயர்,

” ஸவீதா “

.காலை 09.00 மணிமுதல் மதியம் 12.00
மணி வரை அவர் “ஸவீதா “எனும் நாமத்தில் தான் அழைக்கப்பட வேண்டும்,

இவன்
அவிட்டத்தோன்

.

பாராஸாரா ஜோதிஷஸ்லோகம்.
…………………………………………………..
” மானூஷ்யாணாம்
க்ரக மவிடே இடத்தும் ததா,
புஷ்ட தேஹே,

ஷத்ரயந்தோக்ரே ஸுய. ராணா
மதி ஸரஸா ஸுராணாம்
வலத்தும் பூரோ வா,

நித்யஸ் தல்க்ஷேத்ர. முக்யே
பரிஸரண க்ருந்தாம் தேவக. னாம் குரரூணாம்.

( Bharatheeya jyothisham. Parasaara. Krantha sloga. Method only not others astroligal method!

Regard!
by
Ajaykumar nair)

TAMIL. Langage explain. ;
………………………………
ஒரு வீட்டை கட்ட ஆரம்பிக்கும்போது
அந்த வீடானது!

சிவன், காளீ போன்ற உக்ரக மூர்த்திகளின்தேவ க்ஷேத்திரத்தின் வலது பாகம், அல்லது க்ஷேத்ரத்தின்முன்பாகத்தில் வீட்டை நிர்மாணிக்ககூடாது !

அதேபோல்தான்
விஷ்ணு, மகாலட்சுமி, போன்ற சாந்த சொரூபம் கொண்டுள்ள பிரதிஷ்டா மூர்த்திகள் க்ஷேத்ரங்களின் இடது பாகத்திலும் மற்றும் பின்பாகத்திலும் போன்ற இடங்களில் வீடு வைத்து வாழக்கூடாது.

காரணம்,

உக்ரமூர்த்திகள் க்ஷேத்திரத்திலிருந்து வலது பக்கமும், முன் பக்கமும் திருஷ்டி செய்வார்கள்,

அதனால் அங்கு வாழும் மக்கள் அதே கோப குணம் உடையவர்களாக மாறுவார்கள்,

அதே போல் ஸாந்த ஸொரூப க்ஷேத்திர மூர்த்திகள் வலது பாகத்திலும்
க்ஷேத்திரத்தின் முன் பாகத்திலும் சுப திருஷ்டி செய்வார்கள்
அந்த இடங்களில் வீடுகள் இருந்தால்
அமைதியான சுபாவம் அம்மக்களுக்கு ஏற்படும்.

அதேசமயம்!

உக்ர தேவர்கள்கள் க்ஷேத்ரங்கள் வலது பாகமும், க்ஷேத்திரத்தின் முன் பாகமும் வீடு வைத்து வாழ்பவர்கள், அந்த உக்ர தேவர்கள் தேவக்ஷேத்திர நிர்வாகிகள், தந்திரிகள், நித்யபூஜகன்மார்கள் மற்றும் தேவக்ஷேத்ர அறங்காவலர்கள், மடப்பள்ளி நிர்வாகிகள் போன்று க்ஷேத்திரம் சம்பந்த பட்டவர்கள் மட்டுமே வீடு வைத்து வாழ முடியும்,

இவர்களுக்கு சுபாவசீல மாற்றங்கள் உண்டாகாது.

வீட்டை கிரகநிர்மாணம் செய்யும்போது இவையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இவன்
அவிட்டத்தோன்

.

Address

KERALIYA prasana Jyothishalayam.
41.b.
Senthil nagar mainroad.
Soorappatu.
Velammal college back side.
Nearby puzhal.
District ; chennai city.
state ; Tamilnadu.
Country ; India.

பராஸாரா ஜோதிஷ ஸ்லோகம்.
……………………………………
, கர்க்கிடைண ஜஷாதி துலா,
ஸஜலா ஸேஷா ஸுஷ்கா ;

கற்கிடகம். துலா, விருச்சி, மகரம், கும்பம், மீனம்,
மேற்சொன்ன இராசிக்ஷேத்ரங்கள் ஜலராசிக்ஷேத்ரங்கள் ஆகும்.
பண்டைய ஜோதிஷ ஆச்சாரயன்மார்கள். ஜோதிஷ கிரகந்தங்களில் பன்னிண்டு இராசிக்ஷேத்ரங்களில், ஆறு இராசிக்ஷேத்திரங்கள் ஜலராசிக்ஷேத்ரங்கள் என்று ரூபத்தியுள்ளனர்.

ஒவ்வொருவரும் இராசிக்ஷேத்திரமும் அந்தந்த பூதத்துவ அடிஸ்தானத்தில் தான் வேறுபடுத்தி காட்டியுள்ளார்கள்,

மேடம், சிம்மம், தனூ போன்ற இராசிக்ஷேத்ரங்கள் அக்னிராசிக்ஷேத்ரங்களாகும்.
(Fire houses)

எடபம், கன்னியகா. மகரம் போன்ற இராசிக்ஷேத்திரங்கள் நிலராசிக்ஷேத்ரங்கள்
(Land houses)

மிது, துலா, கும்பம் போன்றவைகள் காற்று இராசிக்ஷேத்திரங்கள் ஆகும்,
(Air houses)

கற்கிடகம், விருச்சி, மீனம் இவைகள் ஜலராசிக்ஷேத்ரங்கள்.
( Water houses)

Fire,
Land,
Air
Water,
எவைகளின் முதல் முதல் எழுத்துகளை கூட்டி சுருக்கமாக ( F.L.A.W=FLAW) என்று ப்ளா என்று ஞாபகம் வைக்கலாம்.
பண்டையகாலங்களில் ஜோதிஷ ஆச்சார்யன்மார்கள் பன்னிரண்டு இராசிக்ஷேத்ரங்களை ஜலராசிக்ஷேத்ரங்கள் என்று சொன்னாலும்கூட சாதரணமாக மூன்று இராசிக்ஷேத்ரங்களைதான் ஜலராசிக்ஷேத்ரங்கள் கற்கிடகம், விருச்சி, மீனம் போன்றவைகளை தான் ஜலராசிக்ஷேத்ரங்கள் என்று கணக்கில் கொள்ளப்படுகின்றது.
ப்ரஸ்னஜோதிஷத்திலும் இந்த மூன்று இராசிக்ஷேத்ரங்களைதான் ஜலராசிக்ஷேத்ரங்கள் எடுத்துகொள்ளப்படுகின்றது.
திரிகோணகக்ஷேத்ர பூதத்துவப்படியும் , நிலம், காற்று, ஜலம் போன்று இராசிக்ஷேத்ரங்கள் பிரித்து கொண்டாலும் இராசிக்ஷேத்திரங்கள் ரூபத்தை கணக்கில் எடுத்துகொண்டுதான், பழைய ஜோதிஷ கிரந்தங்களில் ஜலராசிக்ஷேத்ரங்கள் கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டது.

உதாகரணத்திற்கு!
கற்கிடக்ஷேத்ரத்தின் ரூப சான்னித்யம் நண்டு ஆகும் அல்லவோ!
இந்த நண்டு ஜலத்தினுள்ளில் தான் வாழுந்துகொண்டிருக்கும் ஜீவராசி ஆகும்.

துலாராசிக்ஷேத்ரம் ரூபம் தராசுக்கோல் என்கிற துலாம் ஆகும் என்றாலும் பண்டைய ஜோதிஷ ஆச்சார்யன்மார்கள் துலாராசிக்ஷேத்ரத்திற்கு மற்றொரு ரூப. சான்னித்யம் கொடுத்துள்ளார்கள்,
கழுகின் தலையையும், சிங்கத்தின் ஸரீரமும் கொண்ட ரூபத்திதையும் அதற்கு கொடுத்துள்ளார்கள்.
இந்த ரூபத்தை,
,சாபர் பக்ஷி,
என்று அழைக்கப்படுகின்றது.
இந்த. சாபர்பக்ஷி மிக்கவாறும் பாதாள நீர்நிலைகளில் யாருக்கும் தெரியாமல் ஜீவித்துகொண்டிருக்கு விலங்குபக்ஷி ஆகும்.

அதேபோல்
விருச்சிகக்ஷேத்திரன் ரூப சான்னித்யம் தேள் அல்லவோ! அந்த தேளானது நிலத்தில் ஜீவிக்கின்ற ஜீவராசியை எடுக்ககூடாது,
நீரிலுனுள்ளில் ஜீவிக்ககூடிய தேளை தான் ரூப சான்னித்யமாக எடுத்து கொள்ளவேண்டும்.

மகரம் ரூப சான்னித்யம் முதலை ஆகும் அந்த முதலையும் நீரினுள்ளில் ஜீவிக்கக்கூடிய ஜலஜீவியாகும் .
அதேபோல்தான் கும்பம் என்றால் குடம், அந்த கும்பகுடம் நீரை சேமிக்க கூடிய பாத்திரம் ஆகும் அல்லவோ?
அடுத்து மீனம் இராசிக்ஷேத்ரம் மீனம் என்றாலே மீன்கள் வாழகூடிய ஜலம் அல்லவோ?
ஆகவே மேற்சொன்ன அனைத்து இராசிக்ஷேத்ரங்களும் நீர் சம்பந்தப்பட்ட இராசிக்ஷேத்ரங்கள் ஆகும்.

ஜலத்திற்கு காரகாதிபதியாகின்றார் சந்திரபகவான் அல்லவோ? அவரேதான்மனுஷ்ய மனதிற்கும் காரகன் ஆகின்றார்,
மனோகாரகன் என்கின்ற மனோகரன்,
மனோகரன் என்றால் அழகு மிகுந்தவன் என்கின்ற அர்த்தம் வரும்.

இப்போது விஷயத்திற்கு வருவோம்!
ஒரு நல்ல ஜோதிஷ தெய்வக்ஞனை கண்டு மாதாபிதாக்கள் தங்களுடைய புத்திரன்மார்கள் புத்திரிகள் ஜாதகத்தை கொடுத்து தங்களுடைய பிள்ளைகள் எந்த துறையில் நுழைந்தால் ஈடுபட்டால் நல்ல ஒரு ஒளிமையான எதிர்காலம் இருக்கும் என்று கேட்கும்போது?
அல்லது தங்களுடைய பிள்ளைகளை எந்தவிதமான வித்தியாப்பியாஸம் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்று கேட்கும்போது?
ஒன்று தங்களுடைய பிள்ளைகளின் தொழில் வித்தியாப்யாஸம் தாங்கள் தீர்மானித்துபடிதான் இருக்கவேண்டும்!
அல்லது ஜாதகத்தில் பத்தாம்பாவகக்ஷேத்ரம், பத்தாம்பாவக்ஷேத்ரஸேனகன் ஸ்திதியை கொண்டு மட்டும்தான் தீர்மானிக்கும் என்பதை எப்படி தீர்மானிக்க முடியும்?

அதையெல்லாம் தீர்மானிப்பது என்பதெல்லாம் அவரவர்கள் பிள்ளைகளின் மனம் தான் தீர்மானிக்க வேண்டும்.
அல்லாது ஜோதிஷனோ? அல்லது பெற்றோர்களோ? அல்லது ஜாதகத்தின் பத்தாம்பாவக்ஷேத்ரமோ?தீர்மானிக்க முடியாது?

அதனால்தான் ஜாதகத்தில் இலக்னக்ஷேத்ரத்தின் ரூபம், அந்த இலக்னக்ஷேத்ரத்தின் ஸேனகனின் ரூபம், ஜாதகத்தில் பத்தாம்பாவகத்தின் ரூபம் அதன் பலம் கொண்டும் மனோகாரகன் சந்திரன் பலம்கொண்டும் மட்டும்தான் தீர்மானிக்க முடியும்.
ஜாதகர்கள் விதேஸ தேஸங்கள் சென்று உத்தியோகத்தில் ஈடுபடவோ? அல்லது வியாபாரம் செய்யவோ? அல்லது வைத்தியர் ஆகவும்
சிறுநீர் குழாய் பாதிப்புகள், சிறுநீர் கற்கள், இரக்த அழுத்தம், இதயநோய்நிபுணர் போன்றவற்றில் நிபுணத்துவன்மார்கள் ஆகவும் வாய்ப்புகள் மனோகாரகனான வலுத்து இருக்கவேண்டும்.
அல்லது சந்திரன் ஜாதகத்தில் வலுத்திருந்தால் அதாவது நீர்ராசிக்ஷேத்திரத்தில் சந்திரன் பலமாக இருந்தால் திரைப்பட துறையில் நுழைந்து நல்லநல்ல காதல் படங்களை தயாரித்தும் இயக்கும் விஜயிக்கலாம்,
அல்லது மீன் தொழில். பால் வியாபாரம், ரோக ஔஷதங்கள் தயாரிப்பது,
அல்லது கடல் ஆராய்ச்சி போன்றவற்றில் ஈடுபடலாம்

ஒருவரின் தீர்மானிப்பது பத்தாம்பாவகமோ? பெற்றோர்களோ?
ஜோதிஷன்மார்களோ? இல்லை.
ஜாதகத்தில் மனோகரன் என்கிற மனோகாரகன் ஆகிய சந்திரனும்,
இலக்னக்ஷேத்ர ரூபம்,
இலக்னக்ஸேனகன் ரூபம்,
பத்தாம்பாவ ரூபம், பத்தாம்பாவத்தின் அதிபதி ரூபம் போன்றவற்றை நன்கு ஆராய்ந்துதான் தீர்மானிக்க முடியும்!

இவன்
அவிட்டத்தோன்

.

Address

KERALIYA prasana Jyothishalayam.
41.b.
Senthil nagar mainroad.
Soorappatu.
Velammal college back side.
Nearby puzhal.
District ; chennai city.

அதேபோல்
விருச்சிகக்ஷேத்திரன் ரூப சான்னித்யம் தேள் அல்லவோ! அந்த தேளானது நிலத்தில் ஜீவிக்கின்ற ஜீவராசியை எடுக்ககூடாது,
நீரிலுனுள்ளில் ஜீவிக்ககூடிய தேளை தான் ரூப சான்னித்யமாக எடுத்து கொள்ளவேண்டும்.

மகரம் ரூப சான்னித்யம் முதலை ஆகும் அந்த முதலையும் நீரினுள்ளில் ஜீவிக்கக்கூடிய ஜலஜீவியாகும் .
அதேபோல்தான் கும்பம் என்றால் குடம், அந்த கும்பகுடம் நீரை சேமிக்க கூடிய பாத்திரம் ஆகும் அல்லவோ?
அடுத்து மீனம் இராசிக்ஷேத்ரம் மீனம் என்றாலே மீன்கள் வாழகூடிய ஜலம் அல்லவோ?
ஆகவே மேற்சொன்ன அனைத்து இராசிக்ஷேத்ரங்களும் நீர் சம்பந்தப்பட்ட இராசிக்ஷேத்ரங்கள் ஆகும்.

ஜலத்திற்கு காரகாதிபதியாகின்றார் சந்திரபகவான் அல்லவோ? அவரேதான்மனுஷ்ய மனதிற்கும் காரகன் ஆகின்றார்,
மனோகாரகன் என்கின்ற மனோகரன்,
மனோகரன் என்றால் அழகு மிகுந்தவன் என்கின்ற அர்த்தம் வரும்.

இப்போது விஷயத்திற்கு வருவோம்!
ஒரு நல்ல ஜோதிஷ தெய்வக்ஞனை கண்டு மாதாபிதாக்கள் தங்களுடைய புத்திரன்மார்கள் புத்திரிகள் ஜாதகத்தை கொடுத்து தங்களுடைய பிள்ளைகள் எந்த துறையில் நுழைந்தால் ஈடுபட்டால் நல்ல ஒரு ஒளிமையான எதிர்காலம் இருக்கும் என்று கேட்கும்போது?
அல்லது தங்களுடைய பிள்ளைகளை எந்தவிதமான வித்தியாப்பியாஸம் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்று கேட்கும்போது?
ஒன்று தங்களுடைய பிள்ளைகளின் தொழில் வித்தியாப்யாஸம் தாங்கள் தீர்மானித்துபடிதான் இருக்கவேண்டும்!
அல்லது ஜாதகத்தில் பத்தாம்பாவகக்ஷேத்ரம், பத்தாம்பாவக்ஷேத்ரஸேனகன் ஸ்திதியை கொண்டு மட்டும்தான் தீர்மானிக்கும் என்பதை எப்படி தீர்மானிக்க முடியும்?

அதையெல்லாம் தீர்மானிப்பது என்பதெல்லாம் அவரவர்கள் பிள்ளைகளின் மனம் தான் தீர்மானிக்க வேண்டும்.
அல்லாது ஜோதிஷனோ? அல்லது பெற்றோர்களோ? அல்லது ஜாதகத்தின் பத்தாம்பாவக்ஷேத்ரமோ?தீர்மானிக்க முடியாது?

அதனால்தான் ஜாதகத்தில் இலக்னக்ஷேத்ரத்தின் ரூபம், அந்த இலக்னக்ஷேத்ரத்தின் ஸேனகனின் ரூபம், ஜாதகத்தில் பத்தாம்பாவகத்தின் ரூபம் அதன் பலம் கொண்டும் மனோகாரகன் சந்திரன் பலம்கொண்டும் மட்டும்தான் தீர்மானிக்க முடியும்.
ஜாதகர்கள் விதேஸ தேஸங்கள் சென்று உத்தியோகத்தில் ஈடுபடவோ? அல்லது வியாபாரம் செய்யவோ? அல்லது வைத்தியர் ஆகவும்
சிறுநீர் குழாய் பாதிப்புகள், சிறுநீர் கற்கள், இரக்த அழுத்தம், இதயநோய்நிபுணர் போன்றவற்றில் நிபுணத்துவன்மார்கள் ஆகவும் வாய்ப்புகள் மனோகாரகனான வலுத்து இருக்கவேண்டும்.
அல்லது சந்திரன் ஜாதகத்தில் வலுத்திருந்தால் அதாவது நீர்ராசிக்ஷேத்திரத்தில் சந்திரன் பலமாக இருந்தால் திரைப்பட துறையில் நுழைந்து நல்லநல்ல காதல் படங்களை தயாரித்தும் இயக்கும் விஜயிக்கலாம்,
அல்லது மீன் தொழில். பால் வியாபாரம், ரோக ஔஷதங்கள் தயாரிப்பது,
அல்லது கடல் ஆராய்ச்சி போன்றவற்றில் ஈடுபடலாம்

ஒருவரின் தீர்மானிப்பது பத்தாம்பாவகமோ? பெற்றோர்களோ?
ஜோதிஷன்மார்களோ? இல்லை.
ஜாதகத்தில் மனோகரன் என்கிற மனோகாரகன் ஆகிய சந்திரனும்,
இலக்னக்ஷேத்ர ரூபம்,
இலக்னக்ஸேனகன் ரூபம்,
பத்தாம்பாவ ரூபம், பத்தாம்பாவத்தின் அதிபதி ரூபம் போன்றவற்றை நன்கு ஆராய்ந்துதான் தீர்மானிக்க முடியும்!

இவன்
அவிட்டத்தோன்

.

அன்பை வெல்வார்கள். மற்றும் அனைவரையும் அவர்களின் கவர்ச்சியான உரையாடல் பாணியில் மரியாதை. , பிள்ளைகளின் ஒத்துழைப்பால் முதுமை மகிழ்ச்சியாக இருக்கும்.

ஒவ்வொரு வயதிலும்
பன்னிரெண்டு வயது வரை சிறுசிறு உடல்நலக் குறைகளை சந்திக்க வேண்டி வரும், பன்னிரெண்டு வயது முதல் இருபது வயது வரை குடும்பத்தில் வெற்றி உண்டாகும்.ஆனால் இருபது வயது முதல் விபத்து, காயம், காயங்கள் போன்றவை ஏற்படும் முப்பது வயது வரை, குடும்பம் மற்றும் பெற்றோருக்கு நல்ல அனுபவங்கள் இருக்கும்.18 வயது வரை, எதிர்காலம் ஒப்பீட்டளவில் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் முடிவிற்கு உறுதியான அடித்தளத்தை உருவாக்க முடியும், இருப்பினும், இந்த காலகட்டத்தில் அதிக வேலை மற்றும் பலவிதமான கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.நாற்பது வயதுக்கு பிறகு அறுபது வயதிற்குள் வாழ்வில் உயர்ந்த உயர்வு ஏற்படும்.எல்லாவற்றையும் அடைய யோகம் இந்த யுகத்தில் உள்ளது. உத்ரம் நக்ஷத்திரம் என்பது பிறக்கும் போது ஆறு வருட ஆதித்ய தசா, அதன் பின் பத்து வருட சந்திர தசா அதன் பின் ஏழு வருட செவ்வாய் தசா பதினெட்டு வருட ராகு தசா பதினாறு வருட வியாழன். தொடர்ந்து இருபது வருடங்கள் சுக்ர தசா.

அவிட்டத்தோன்